(அ)சிங்கம்

Saturday, November 21, 2009

பிடிவாதம்....

புத்தம் புது வஞ்சிக்கொடி உன்னை நினைத்தேன்,
நித்தம் ஒரு முத்தம் பெற ஏங்கித் தவித்தேன்,
இரத்தம் அது பித்தம் உற நெஞ்சம் துடித்தேன்,
சித்தம் என் சித்தம் அது என்றே இருந்தேன்,
பார்த்தும் விழி வேர்த்தும் எனை மறந்தே இருந்தாய்,
மன்னன் உன் கண்ணன் எனை அண்ணன் என்றாய்,
வாதம் பிடிவாதம் அதில் நீயே வென்றாய்,
என்னுள் அடி உன்னை இனி நீயே கொன்றாய்.

Friday, November 20, 2009

ஜொள்ளு....


நாள் முழுதும் அவளை நினைத்து ஏங்குகிறேன்,
அந்த நினைவிலேயே சென்று தூங்குகிறேன்,
கனவு முழுதும் அவள் முகம் தான்,
இரவு முழுதும் சுகம் சுகம் தான்,
விடிகிறவரையில் பொன்னான நேரம்,
விடிந்ததும் பார்த்தால்,
அச்சச்சோ.. என் கடைவாய் பூரா ஈரம்..

Followers